SELANGOR

நிலையான, விவேக நகருக்கான இரு விருதுகளைக் கிள்ளான் நகராண்மைக் கழகம் வென்றது

1 டிசம்பர் 2023, 3:29 AM
நிலையான, விவேக நகருக்கான இரு விருதுகளைக் கிள்ளான் நகராண்மைக் கழகம் வென்றது

ஷா ஆலம், டிச 1- கூச்சிங் நகரில் கடந்த மாதம் நடைபெற்ற மலேசிய

நகர ஆய்வரங்கை முன்னிட்டு நிலையான மேம்பாட்டு இலக்கு

தொடர்பான திட்டத்தை வெற்றிகரமாகத் தயாரித்ததற்காக கிள்ளான்

நகராண்மைக் கழகத்திற்கு (எம்.பி.கே.) விருது வழங்கப்பட்டது.

அந்த திட்டத் தயாரிப்பதில் கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் வெற்றியை

அங்கீகரிக்கும் வகையிலான இந்த விருதை ஊராட்சி மன்ற மேம்பாட்டு

அமைச்சர் ஙா கோர் மிங் வழங்கியதாக நகராண்மைக் கழகத் தலைவர்

நோராய்னி ரோஸ்லான் கூறினார்.

உள்ளுர் விவகாரங்களைத் தீர்ப்பதற்கும் ஊராட்சி மன்ற, மாநில மற்றும்

தேசிய நிலையிலான கொள்கைகளை ஒருங்கிணைப்பதற்குமான

உலகளாவிய நிகழ்ச்சி நிரவில் எம்.பி.கே.வின் பங்களிப்பை அளவிடுவதை

எஸ்.டி.ஜி. அறிக்கை தயாரிப்பு நோக்கமாக கொண்டுள்ளது.

ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சின் விவேக நகரத் திட்டத்தை

முதலில் அமல்படுத்தியதற்காகவும் கிள்ளான் நகராண்மைக் கழகத்திற்கு

விருது வழங்கப்பட்டது என்றும் நோராய்னி தெரிவித்தார்.

ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சின் விவேக நகர முன்னெடுப்புக்கான

சிறப்பு நிதியாக 200,000 வெள்ளியை நகராண்மைக் கழகம் பெற்றதாகவும்

அவர் சொன்னார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.