ஷா ஆலம், டிச 1: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப்
பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான்
ரஹ்மா திட்டம் இவ்வார இறுதியில் மேலும் ஆறு இடங்களில் காலை 10
மணிக்குத் தொடரும்.
சனிக்கிழமை அன்று மஸ்ஹிட் ஆல் இஸ்காமா, கம்போங் சுங்கை புவாயா பார்க்கிங் வளாகம் (மோரிப்), பெக்கான் கோலா குபு பாரு (கோலா குபு பாரு) மற்றும் 32, ஜாலான் புக்கிட் ஜெராம் (புக்கிட் மெலாவத்தி) ஆகிய இடங்களில் மலிவு விற்பனை நடைபெறும்.
மேலும், ஞாயிறு அன்று மலிவு விற்பனை பத்து தீகா இரவு சந்தை தளம் (பத்து தீகா), மினி RTC சுங்கை லாங் தெங்கா (தஞ்சோங் சிப்பாட்) மற்றும் தாமான் பெங்கிரான் பெலாங்கி குடியிருப்பாளர் கழக அலுவலக வளாகம் (ரவாங்) ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தால் (PKPS) கிட்டத்தட்ட 3000
இடங்களில் இந்த மலிவு விற்பனை நடத்தப்பட்டுள்ளது. ஐந்து
மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த இச்சந்தைக்குச்
சிலாங்கூர் அரசு RM40 மில்லியன் மானியத்தைச் செலவிட்டுள்ளது.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும்
மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை
ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00
வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.




