SELANGOR

இலவசச் சட்ட ஆலோசனை சேவைக்கு - பண்டார் உத்தாமா தொகுதி

30 நவம்பர் 2023, 9:40 AM
இலவசச் சட்ட ஆலோசனை சேவைக்கு - பண்டார் உத்தாமா தொகுதி

ஷா ஆலம், நவ. 30: எதிர்வரும் சனிக்கிழமை பண்டார் உத்தாமா தொகுதி சேவை மையம் சட்டம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த, இலவசச் சட்ட ஆலோசனை சேவையை வழங்குகிறது.

சட்ட நிறுவனமான ``Elaine, Yun & Associates`` உடன் இணைந்து தொகுதி சேவை மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இச்சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகச் சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.

"குடியிருப்பாளர்களுக்கு நீதிமன்ற வழக்கு தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால் அல்லது வழக்கறிஞரின் ஆலோசனை தேவைப்பட்டால், அவர்கள் ஜாலான் SS21/1A, டமன்சாரா உத்தாமாவில் உள்ள அலுவலகத்திற்கு வரலாம்.

"சம்பந்தப்பட்ட ஆவணங்களைக் கொண்டு வாருங்கள், இதனால் செயல்முறை சுமூகமாக நடக்கும். வழக்கு குற்றம் சம்பந்தப்பட்டதாக இருந்தால், இலவசச் சட்ட உதவியை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், RM1 மில்லியன் ஒதுக்கீட்டில் மக்களுக்கு உதவ சட்ட உதவி நிதி திட்டத்தை செயல்படுத்திய முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்கியது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.