SELANGOR

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு RM15 வரை அபராதக் குறைப்பு - கிள்ளான் நகராண்மை கழகம் 

30 நவம்பர் 2023, 9:35 AM
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு RM15 வரை அபராதக் குறைப்பு - கிள்ளான் நகராண்மை கழகம் 

ஷா ஆலம், நவ 30: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை முதல் RM15 வரை அபராதக் குறைப்பு கிள்ளான் நகராண்மை கழகம் வழங்குகிறது. இப்பிரச்சாரம் டிசம்பர் 31 வரை நடைபெறும்.

"நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது உட்பட இன்னும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க படுவதற்கு முன்பு, RM15 என்ற விகிதத்தில் அபராத நிலுவைத் தொகையைச் செலுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று யாங் டிபர்டுவா நோரைனி ரோஸ்லான் தெரிவித்தார்.

இருப்பினும், சிறப்பு இடங்களிலோ அல்லது ஊனமுற்றோர் இடங்களிலோ வாகனம் நிறுத்தி பெற்ற அபராதத்திற்கு இந்த சலுகை உட்பட்டது அல்ல என்று நோரைனி விளக்கினார்.

"எந்தவொரு இடத்தையும் அல்லது பார்க்கிங் இடத்தையோ தடுக்கும் குற்றத்திற்கு இந்த சலுகை வழங்கப்படாது," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.