SELANGOR

செபாட் செயலி வழி பணம் செலுத்துவது மூலம் ஐபோன் 15 ப்ரோவை வெல்வதற்கான வாய்ப்பு

30 நவம்பர் 2023, 8:53 AM
செபாட் செயலி வழி பணம் செலுத்துவது மூலம் ஐபோன் 15 ப்ரோவை வெல்வதற்கான வாய்ப்பு

ஷா ஆலம், நவ 30 : சிட்டிசன் இ-பேமென்ட் (செபாட்) செயலி வழி ஊராட்சி மன்றங்களுக்கு கட்டணங்கள் செலுத்துவது மூலம் ஐபோன் 15 ப்ரோவை வெல்வதற்கான வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படுள்ளது.

இன்று தொடங்கி அடுத்த பிப்ரவரி 29 வரை நடைபெறும் இப்போட்டியில் அதிர்ஷ்டசாலிகளுக்கு மேலும் 36 கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்படும்.

"நீங்கள் 29 நவம்பர் முதல் 29 பிப்ரவரி 2024 வரை CEPat செயலி மூலம் மதிப்பீடு அல்லது நில வரி, வாடகை, உரிமம், வளாகம் மற்றும் பார்க்கிங் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும்.

"பங்கேற்பு காலம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகளை மேற்கொண்டவர்கள்தான் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவர்" என போட்டியின் அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

CEPat செயலியை இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள். மேலும் தகவலுக்கு முகநூலில் அதிகாரப்பூர்வ ``CEPat-CEPat Menang`` பக்கத்தைப் பின்தொடரவும்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.