SELANGOR

சிலாங்கூரின் ஆரோக்கியமான குழந்தைகள் நாளை முன்னிட்டு குழந்தைகளுக்கான இலவச சுகாதார பரிசோதனை

30 நவம்பர் 2023, 8:50 AM
சிலாங்கூரின் ஆரோக்கியமான குழந்தைகள் நாளை முன்னிட்டு குழந்தைகளுக்கான  இலவச சுகாதார பரிசோதனை

ஷா ஆலம், நவ 30 : எதிர்வரும் சனிக்கிழமை சிலாங்கூரின் ஆரோக்கியமான குழந்தைகள் நாளை முன்னிட்டு குழந்தைகளுக்கான இலவச சுகாதார பரிசோதனை உட்பட பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநில அரசு, மலேசியாவின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகம் மற்றும்

நாடாளுமன்ற சேவை மையம் ஆகியவையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள

இந்நிகழ்ச்சி சீன தேசிய மழலையர் பள்ளி ஈஜோக்கில் காலை 9 மணி முதல் மதியம் 1

மணி வரை நடைபெறவுள்ளதாகக் கோலா சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர்

கூறினார்.

அந்நிகழ்வில் ஊட்டச்சத்து ஆலோசனை, சுகாதார கண்காட்சி மற்றும்

குழந்தைகளுக்கான இலவச சுகாதார பரிசோதனை ஆகியவையும் இடம்பெறும்.

"ஏழு முதல் 12 வயது வரையிலான பங்கேற்பாளர்களுக்கு விளையாட்டுகள், வண்ணம்

தீட்டும் போட்டிகள், கயிறு தாண்டுதல் மற்றும் கை மல்யுத்தம் ஆகியவையும்

நடைபெறும்" என்று டத்தோஸ்ரீ டாக்டர் டுசுல்கேப்ளி அஹ்மட் முகநூலில் தெரிவித்தார்.

இந்த நாளைக் கொண்டாட பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள், இது

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு அணுகுமுறையை ஏற்படுத்துவதுடன்,

அதிர்ஷ்டக் குலுக்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் வழங்கும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.