SELANGOR

பல்வேறு குற்றங்களுக்காக RM204.8 மில்லியன் அபராதத் தொகை பதிவு

30 நவம்பர் 2023, 8:18 AM
பல்வேறு குற்றங்களுக்காக RM204.8 மில்லியன் அபராதத் தொகை பதிவு

ஷா ஆலம், நவ 30: பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் RM204.8 மில்லியன் அபராதத் தொகையை ஷா ஆலம் மாநகராட்சி 1978 முதல் பதிவு செய்துள்ளது.

எம்பிஎஸ்ஏ தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த செப்டம்பர் வரையிலான நிலுவைத் தொகையில் 2,931,832 நோட்டிஸ் அபராதங்கள் இருந்தன என அதன்  இடைக்கால  மேயர் செரெமி தர்மன் கூறினார்.

"தெளிவான மற்றும் செல்லுபடியாகும் பார்க்கிங் கூப்பனைக் காட்டத் தவறியது போன்ற பார்க்கிங் குற்றங்களுக்காக அதிக அளவு அபராதம் வழங்கப்படுகிறது.

"அது தவிர, அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள், வணிக உரிமம் இல்லாத வளாகங்கள் மற்றும் அனுமதியின்றி செயல்படும் கடை வியாபாரிகள் ஆகிய குற்றங்களும் அடங்கும்," என்று அவர் கூறினார்.

மக்கள் தங்கள் நிலுவைத் தொகையை அகற்றுவதை உறுதி செய்வதற்காக இணைய கட்டண வசதியைச் சேர்ப்பது உள்ளிட்ட பிரச்சாரங்களை தனது தரப்பு அடிக்கடி ஏற்பாடு செய்கிறது என்று கூறினார்.

"சமூகத்தைத் தண்டிப்பதற்கு பதிலாக அமைக்கப்பட்ட விதிகளுக்கு இணங்க கல்வி கற்பிக்கும் நோக்கத்திற்காக அபராதம் விதிக்கப்படுகிறது.

"பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அபராதம் வழங்கப்பட்ட நபர்கள் 24 மணி நேரத்திற்குள் அவற்றை செலுத்தினால் RM10 மட்டுமே வசூலிக்கப்படும் போன்ற சலுகைகளை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.