SELANGOR

புக்கிட் லாகோங் நீர்வீழ்ச்சி பொழுதுபோக்கு பகுதி தற்காலிகமாக மூடப்பட்டது

30 நவம்பர் 2023, 8:09 AM
புக்கிட் லாகோங் நீர்வீழ்ச்சி பொழுதுபோக்கு பகுதி தற்காலிகமாக மூடப்பட்டது

ஷா ஆலம், நவ 30: புக்கிட் லாகோங் நீர்வீழ்ச்சி பொழுதுபோக்கு பகுதியைச் செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) தற்காலிகமாக மூடியது.

ஆகஸ்ட் 27 அன்று நடந்த சமீபத்திய நிகழ்வு உட்பட இதற்கு முன்பு நிகழ்ந்த பல நீரில் மூழ்கும் சம்பவங்களைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப் பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

"எம்பிஎஸ் தற்போது நீர்வீழ்ச்சி மற்றும் பெரிய ஆற்றுப் பாறைகளில் கயிறுகளை வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, இதனால் அந்த இடத்தில் நீர்ச்சுழல்கள் எதுவும் ஏற்படாது," என்று தெரிவிக்கப்பட்டது.

அங்கு குளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த பராமரிப்பு ஒப்பந்ததாரர் மூலம் அவ்வப்போது கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது என்றும் எம்பிஎஸ் விளக்கியது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.