SELANGOR

வணிகம், தொழில் மற்றும் விளம்பர உரிமங்களை புதுப்பிப்பதற்குச் சிறப்பு கவுண்டரை எம்பிகே திறந்துள்ளது

30 நவம்பர் 2023, 8:08 AM
வணிகம், தொழில் மற்றும் விளம்பர உரிமங்களை புதுப்பிப்பதற்குச் சிறப்பு கவுண்டரை எம்பிகே திறந்துள்ளது

ஷா ஆலம், நவ 30: வணிகம், தொழில் மற்றும் விளம்பர உரிமங்களை புதுப்பிப்பதற்கு சிறப்பு கவுண்டரை டேவான் ஹம்சாவில் அடுத்த டிசம்பர் 12 முதல் 30 வரை கிள்ளான் நகராண்மை கழகம் திறந்துள்ளது.

கவுண்டரின் செயல்பாட்டு நேரம் திங்கள்-வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் (காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும்) செயல்படும் என்று யாங் டிபெர்துவா நோரைய்னி ரோஸ்லான் தெரிவித்தார்.

மதியம் 12.15 மணி முதல் 2.45 மணி வரை இடைவேளையின் போது கவுண்டர் தற்காலிகமாக மூடப்படும்.

"மன்றத்தில் இணைய வழி புதுப்பிக்க விரும்பும் பார்வையாளர்களுக்கு ஆறு கணினிகளின் சேவையையும் எம்பிகே வழங்குகிறது.

"கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க உங்கள் ஒத்துழைப்பை நான் கேட்டுக்கொள்கிறேன். டிசம்பர் 31 க்குப் பிறகு இதைச் செய்தால் அபராதம் விதிக்கப்படும்" என்று எம்.பி.கே தலைமையகத்தில் இன்று நடைபெற்ற முழு கூட்டத்திற்கு தலைமை தாங்கி போது கூறினார்.

RM20 அறிவிப்புக் கட்டணம் வசூலிக்கப் படுவதைத் தவிர்ப்பதற்காக, 2024 பிப்ரவரி 29க்கு முன் அல்லது 1/2024 காலக்கெடுவிற்கு மதிப்பீட்டு வரியை உடனடியாகச் செலுத்துமாறு கிள்ளான் மக்களுக்கு நோரைய்னி நினைவூட்டினார்.

வரி இருப்புச் சோதனைகள் மற்றும் பணம் செலுத்தும் நடவடிக்கைகளைப் போர்ட்டல் ipay.mpklang.gov.my அல்லது pbtpay.kpkt.gov.my மூலமாகவும் மேற்கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.