பெட்டாலிங் ஜெயா, நவ 30: இம்மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு தொடக்கம் வரை நீடிக்கும் மழை காலம் முழுவதும் வெள்ளத்தை எதிர்கொள்ள பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) அதன் உறுப்பினர்கள் மற்றும் கருவிகளுடன் தயாராகி வருகிறது.
நவம்பர் 3 முதல் 24 மணி நேரமும் செயல்படும் பேரிடர் செயல்பாட்டு அறையையும் உள்ளூர் அதிகார சபை செயல்படுத்தியுள்ளது என்று அதன் துணை மேயர் அஸ்னான் ஹாசன் தெரிவித்தார்.
"பேரிடர்கள் தொடர்பான புகார்களைப் பெறுவதும், உள் துறை அளவில் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து பேரிடர் செயல்பாட்டு அறையின் முக்கியப் பணியாகும்.
"பேரிடர் செயற்பாட்டு அறை பேரிடர் டாஷ்போர்டைப் பயன்படுத்தி உடனடி வேகத்தில் செயல்படுவதற்கும் மேலாண்மை செய்வதற்கும் உதவும்" என்று மெனாரா எம்பிஜேயில் மாதாந்திர கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய போது அவர் கூறினார்.
மேலும், கருத்து தெரிவித்த அஸ்னான், தற்போது 46 சிறிய வாகனங்கள் மற்றும் கனரக இயந்திரங்களை கொண்டிருக்கும் நிலையில் இரண்டு யூனிட் படகுகளை வாங்குவதற்கும் தமது தரப்பு தயாராகி வருவதாக தெரிவித்தார்.
"அது தவிர, தற்காலிக தங்கும் மையங்களாக (பிபிஎஸ்) 24 மண்டபங்கள் மற்றும் பொது அரங்குகள் எந்த நேரத்திலும் பேரழிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்க பயன்படுத்தப்படலாம்," என்று அவர் மேலும் கூறினார்.




