பெட்டாலிங் ஜெயா, நவ 30: சொத்து மற்றும் இருப்பிடங்களை பாராமரிக்க தவறியதற்காக மொத்தம் 39 தனியார் சொத்துடமையாளர்கள் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியின் கீழ் எச்சரிக்கைக்கு உட்பட்டுள்ளன.
ஒவ்வொரு உரிமையாளரிடமும் உள்ளாட்சி சட்டம் 1976 மற்றும் மாசுபாட்டை தடுப்பதற்கான சட்டம் (எம்பிஎஸ்ஜே 1999) ஆகியவற்றின் கீழ் RM1,000 குள் கட்டணம் விதிக்கப்படலாம் என துணை மேயர் அஸ்னான் ஹாசன் கூறினார்.
"உள்ளாட்சி சட்டம் 1976 இன் பிரிவு 74 இன் கீழ், துப்புரவு பணிகளை மேற்கொள்ள உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது," என்று அவர் நேற்று எம்பி எஸ் ஜே முழு கூட்டத்தின் போது கூறினார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படா விட்டால், சம்பந்தப்பட்ட நிலத்தில் எம்பிஎஸ்ஜே துப்புரவுப் பணிகளையும் மேற்கொள்ளும், இருப்பினும் அனைத்து கட்டணங்களும் சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் ஏற்க வேண்டும் என அஸ்னான் மீண்டும் வலியுறுத்தினார்.




