SELANGOR

கெர்லிங் குருகுலம்-சூரியன் ஆசிரம மாணவர்களோடு தீபாவளிக் கொண்டாட்டம்

28 நவம்பர் 2023, 8:56 AM
கெர்லிங் குருகுலம்-சூரியன் ஆசிரம மாணவர்களோடு தீபாவளிக் கொண்டாட்டம்

கெர்லிங், நவ 28 -  கோத்தா பெர்மாய் கோல்ஃப் கிளப்பில் அண்மையில் நடைப்பெற்ற தீபாவளி விருந்து உபசரிப்பில் கெர்லிங்    தோட்டத் தமிழ்ப்பள்ளி குருகுல மற்றும் மைகீத்தா சூரியன் ஆசிரம மாணவர்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இந்த விருந்தினை‌ ஏற்பாடு செய்த ஆசிரியர் திருமதி வானதி அறுமுகம், திரு.கோகி மற்றும் அவர்தம் குழுவினருக்குப் பள்ளி தலைமையாசிரியர் திரு.சி. குமார் நன்றியினை தெரிவித்து கொண்டார்.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சரின் தேசிய ஆலோசனை மன்ற உறுப்பினர் திரு. க.சுப்ரமணியம், மைகீத்தா நிர்வாகத்தினர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மாணவர்கள் இப்படியொரு நிகழ்வில் கலந்து கொண்டது இதுவே முதன் முறையாகும் என்று மைகீத்தா ஆசிரம தலைவர் திரு. அ.கனகராஜா தெரிவித்தார்.

ஆடல் பாடல் மற்றும் மேஜிக் போன்ற நிகழ்ச்சி படைப்புகள் மாணவர்களுக்குச் சிறந்த பொழுது போக்காக அமைந்து மகிழ்ச்சி அடையச் செய்தன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.