SELANGOR

மூத்த குடிமக்கள் மாநாட்டில் 400 பேர் பங்கேற்பு

28 நவம்பர் 2023, 8:29 AM
மூத்த குடிமக்கள் மாநாட்டில் 400 பேர் பங்கேற்பு

ஷா ஆலம், நவ 28: கடந்த மாதம் கொண்டாடப்பட்ட மூத்த குடிமக்கள் தினம் 2023யை முன்னிட்டு நடைபெற்ற மூத்த குடிமக்கள் மாநாட்டில் மொத்தம் 400 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர்.

உடற்பயிற்சி, சுகாதாரப் பேச்சுக்கள், உயிலின் முக்கியத்துவம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு ஆகிய நான்கு கூறுகளை உள்ளடக்கிய பிரச்சனைகளை இந்த மாநாடு வலியுறுத்துகிறது என்று பெண்கள் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

"மூத்த குடிமக்களுக்கு இந்த அம்சங்கள் அனைத்தும் முக்கியமானவை, கூடுதலாக, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையிலான முதியோர்கள் உள்ளனர் (807,520 அல்லது 7.21 மில்லியன் மக்கள் தொகையில் 11.2 சதவீதம் பேர்).

"இந்த மாநாட்டில் 'மோசடி' பிரச்சனைகள் பற்றியும் பேசப்பட்டது, ஏனெனில் இச்செயல் வயதானவர்களையும் குறிவைக்கிறது," என்று அன்பால் சாரி கூறினார்.

இங்குள்ள ஐடியல் கன்வென்ஷன் சென்டர் (ஐடிசிசி) ஷா ஆலமில் நடைபெற்ற விழாவில், முதியோர்களுக்கான சிறந்த செயல்பாட்டு மையத்திற்கான (PAWE) விருதை சுபாங் ஜெயாவுக்கும், சிறந்த பராமரிப்பு மையத்திற்கான விருது ``Bait Mawaddah`` பராமரிப்பு மையத்துக்கும் அன்பால் வழங்கினார்.

இரண்டு மையங்களும் ரொக்கமாக RM800 மற்றும் பாராட்டுச் சான்றிதழும் பெற்றன.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.