SELANGOR

சிலாங்கூரில் 14 குடும்பங்கள் வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம்

28 நவம்பர் 2023, 4:54 AM
சிலாங்கூரில் 14 குடும்பங்கள் வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம்

கோலாலம்பூர், நவ 28 - கிளந்தான் மற்றும் திரங்கானுவில் வெள்ளம்

காரணமாகத் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை

இன்று காலை குறைந்துள்ளது. எனினும், சிலாங்கூரில் வெள்ள

நிலைமையில் மாற்றம் இல்லை.

இன்று காலை 8.00 மணி நிலவரப்படி சிலாங்கூரில் 14 குடும்பங்களைச்

சேர்ந்த 34 பேர் இன்னும் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளதாக

மாநில சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் செயலி கூறியது.

அவர்கள் அனைவரும் கோல சிலாங்கூர், சுல்தான் அப்துல் அஜிஸ் தேசிய

பள்ளியில் அடைக்கலம் நாடியுள்ளதாக அது தெரிவித்தது.

திரங்கானுவில் வெள்ள நிலை மேம்பாடு கண்டு வருகிறது. பத்து

குடும்பங்களை சேர்ந்த 40 பேர் இன்னும் வெள்ள நிவாரண மையங்களில்

உள்ளனர்.

கோல நெருஸ், அத்தா டோல் தேசிய பள்ளியில் ஆறு குடும்பங்களைச்

சேர்ந்த 25 பேரும் தோக் கா தேசிய பள்ளியில் இரு குடும்பங்களைச்

சேர்ந்த அறுவரும் செத்தியு ரூ செப்புலோ தேசிய பள்ளியில் இரு

குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேரும் அடைக்கலம் நாடியுள்ளனர்.

இதனிடையே, கிளந்தான் மாநிலத்தின் பாச்சோக் மற்றும் பாசீர் மாஸ்

மாவட்டங்களில் இன்று காலை 7.27 மணி நிலவரப்படி 142

குடும்பங்களைச் சேர்ந்த 463 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் தங்க

வைக்கப்பட்டுள்ளனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.