SELANGOR

தனிப்பட்ட தகவல்களைக் கேட்கும் தரப்பிடம் எச்சரிக்கையாக இருக்கவும் – ஶ்ரீ செத்திய தொகுதி

28 நவம்பர் 2023, 4:39 AM
தனிப்பட்ட தகவல்களைக் கேட்கும் தரப்பிடம் எச்சரிக்கையாக இருக்கவும் – ஶ்ரீ செத்திய தொகுதி

ஷா ஆலம், நவ 28: ஶ்ரீ செத்திய தொகுதியில் வசிப்பவர்கள், குறிப்பாகத் தாமான் டத்தோ ஹோர்மாட் மற்றும் டேசா புத்ரியில் உள்ளவர்கள், தனிப்பட்ட தகவல்களை கேட்கும் தரப்பிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நினைவூட்டப்படுகிறார்கள்.

சம்பந்தப்பட்ட பகுதியில் வசிப்பவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்குத் தனது தரப்பு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என மாநில சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஃபஹ்மி நகா கூறினார்.

"உங்கள் தனிப்பட்ட தகவலைக் கேட்கும் எந்தவொரு தரப்பினரின் கோரிக்கையையும் ஏற்க வேண்டாம் மற்றும் கவனமாக இருக்கவும் குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

"ஶ்ரீ செத்திய மாநில சட்டமன்ற சேவை மைய அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவு என்று பொறுப்பற்ற தரப்புகள் ஏமாற்றி வருவதாக," அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அதே அறிக்கையில், இந்த விவகாரம் தொடர்ந்தால் காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.

சிலாங்கூர் அரசாங்க உதவி விண்ணப்பத்தின் நிலையை மேலும் விசாரிக்க அல்லது சரிபார்க்க விரும்பும் ஶ்ரீ செத்திய வாக்காளர்கள் அதன் மக்கள் சேவை மையத்தை நேரடியாக நாடலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.