ECONOMY

கார் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியது- ஏழு மாதக் குழந்தை கருகி மரணம்

27 நவம்பர் 2023, 5:58 AM
கார் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியது- ஏழு மாதக் குழந்தை கருகி மரணம்

கோத்தா பாரு, நவ 27- கோத்தா பாரு- கோல கிராய் சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில் ஏழு மாதக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தீப்பற்றியதில் அக்குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கோல கிராய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை அதிகாரி முகமது ஃபாட்சில் மூசா கூறினார்.

இந்த விபத்து குறித்து அதிகாலை 4.04 மணிக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கோல கிராய் மற்றும் சுங்கை டுரியான் நிலையங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்.

அந்தக குழந்தையின் பெற்றோர் பயணம் செய்த ஹோண்டா ஜெஸ் ரகக் கார் கட்டுப்பாட்டை இழந்து விளக்கு கம்பத்தில் மோதி தீப்பற்றியதாக  அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

அந்தக் காரில் மூவர் இருந்தனர். ஆடவர் ஒருவருக்கு உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்ட வேளையில் பெண்மணி ஒருவர் காயங்களுக்குள்ளானார். குழந்தையின் உடல் கருகிய நிலையில் காரில் கண்டுபிடிக்கப்பட்டது என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.