SELANGOR

தொற்றுநோயின் 46 வது வாரத்தில் 111 டிங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன

23 நவம்பர் 2023, 7:20 AM
தொற்றுநோயின் 46 வது வாரத்தில் 111 டிங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன

சுபாங் ஜெயா, நவ 23: தொற்றுநோயின் 46 வது வாரத்தில் சுபாங் ஜெயா மாநகராட்சி நிர்வாகப் பகுதியில் மொத்தம் 111 டிங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது நான்கு சதவீதம் குறைந்துள்ளது.

இதுவரை மொத்தம் 6,971 டிங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 44 சதவீதம் அதிகமாகும் என மேயர் முகமட் பெளசி முகமட் யாதிம் கூறினார்.

"ஏடிஸ் இனப்பெருக்கத்திற்கு ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த, அவை இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கண்டுபிடித்து அழிக்க குடியிருப்பாளர்கள் வாரத்திற்கு ஒரு முறை 10 நிமிட பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

"ஏடிஸ் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அழிக்கும் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள சமூகங்களும் ஊக்குவிக்கப்படுகின்றனர். டிங்கி காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால், குடியிருப்பாளர்கள் உடனடியாக சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று அவர் கூறினார்.

எம்பிஎஸ்ஜே தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற முழு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

டிங்கி ஹாட் ஸ்பாட் இடங்களில் பெட்டாலிங் ஜெயா S11/26, USJ11/1, சுபாங் பெர்டானா குட் இயர் கோர்ட் 8, USJ14, புத்ரா ஐயிட் 8, தாமான் பூச்சோங் பெர்டானா 1, பண்டார் கின்றாரா 4 மற்றும் தாமான் சௌஜானா பூச்சோங் SP3 ஆகியவை அடங்கும்.

நவம்பர் 11 அன்று முடிவடைந்த 45வது தொற்றுநோயின் வாரத்தில் மொத்தம் 50,730 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் கடந்த ஆண்டை விட 63.2 சதவீதம் (31,078) அதிகரித்துள்ளது என பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.