ஷா ஆலம், நவ 23 - சிலாங்கூரிலுள்ள இளைஞர் அமைப்புகள் அல்லது
தன்னார்வலர் இயக்கங்களின் நடவடிக்கைகளை மேலும்
வலுப்படுத்துவதற்கு ஏதுவாக அவை ஒருங்கிணைக்ப்பட வேண்டும் என்று
பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரைத்துள்ளார்.
மாநிலத்தில் தற்போது டீம் சிலாங்கூர், சிலாங்கூர் இளைஞர் இயக்கம்
மற்றும் செர்வ் எனப்படும் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பு போன்ற பல
தொண்டு தளங்கள் உள்ளதாக டேனியல் அப்துல் ரஷிட் ஹருண்
கூறினார்.
இந்த இளைஞர்களின் தளங்களை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக செர்வ் டீம்
சிலாங்கூர் மற்றும் சிலாங்கூர் இளைஞர் இயக்கம் போன்ற அமைப்புகளை
ஒருங்கிணைக்கலாம். ஒவ்வோரு இயக்கத்திற்கும் தனித்தனி மானியம்
உள்ளது. மேலும் இளைஞர்களின் மேம்பாட்டை தனித்தனியாக
மேற்கொள்வதில் எந்த பயன் கிட்டப் போகிறது என அவர் குறிப்பிட்டார்.
மாநில சட்டமன்றத்தில் நேற்று மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு தொடர்பான
விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத்
தெரிவித்தார்.
அனைத்து இளைஞர் இயக்கங்களையும் ஒருங்கிணைத்த மற்றும் இளம்
தலைமுறையினரின் மேம்பாட்டை இலக்காக கொண்ட ஒரே திட்டத்தை
அமல்படுத்த வேண்டும் என்பது எனது பரிந்துரையாகும் என அவர்
சொன்னார்.
இதனிடையே, விளையாட்டுத் துறைக்கான மானியத்தை
அதிகரிப்பதற்கான சாத்தியத்தை ஆராயும்படி மாநில அரசை கம்போங்
துங்கு உறுப்பினர் லிம் யீ வேய் கேட்டுக் கொண்டார்.
மாநில அரசு ஒதுக்கியுள்ள 80 லட்சம் வெள்ளி நிதி சுக்மா எனப்படும் மலேசிய போட்டி விளையாட்டுகளுக்கு விளையாட்டாளர்களைத் தயார் படுத்துவதற்கும் விளையாட்டின் மேம்பாட்டிற்கும் போதுமானதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.




