SELANGOR

சிலாங்கூரில் 1.7 கோடி வெள்ளி பொழுதுபோக்கு வரி இன்னும் வசூலிக்கப்படவில்லை- தணிக்கை அறிக்கை கூறுகிறது

23 நவம்பர் 2023, 5:48 AM
சிலாங்கூரில் 1.7 கோடி வெள்ளி பொழுதுபோக்கு வரி இன்னும் வசூலிக்கப்படவில்லை- தணிக்கை அறிக்கை கூறுகிறது

ஷா ஆலம், நவ 23 - சிலாங்கூர் மாநிலத்தில் 1 கோடியே 70 லட்சம்

வெள்ளி பொழுதுபோக்கு வரி இன்னும் வசூலிக்கப்படவில்லை என்றும்

இதனால் மாநில கருவூலத்திற்கு வருமான இழப்பு ஏற்படும் சாத்தியம்

உள்ளதாகவும் தலைமை கணக்காய்வாளரின் அறிக்கையில்

கூறப்பட்டுள்ளது.

தீம் பார்க் எனப்படும் பொழுதுபோக்கு மையங்கள் சம்பந்தப்பட்ட 1

கோடியே 14 லட்சத்து 10ஆயிரம் வெள்ளி, விளையாட்டு போட்டிகள்

தெடர்பான 40 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளி, சினிமா திரையரங்குகள்

வாயிலாகப் பெற வேண்டிய 530,000 வெள்ளி மற்றும் டிக்கெட்

கட்டணமில்லா பொழுதுபோக்கு மையங்கள் மூலம் பெற வேண்டிய 176,60

வெள்ளி ஆகியவை இன்னும் வசூலிக்கப்படாத வரிகளாகும்.

ரசீது இழப்பீடுக்கான சாத்தியங்கள் விளைவாக ஏற்பட்ட பொருந்தா

அபராதங்களின் மதிப்பு 87,000 வெள்ளியாக இருக்கும் வேளையில் இவை

அனைத்தையும் சேர்த்து பொழுதுபோக்கு வரி வசூலிப்பில் ஏற்பட்ட

இழப்பின் மதிப்பு 1 கோடியே 70 லட்சம் வெள்ளியாக உயர்ந்துள்ளது என்று

அந்த அறிக்கை குறிப்பிட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.