ஷா ஆலம், நவ 22: இந்த ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டு மலிவு விற்பனை திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசு RM25 மில்லியனுக்கும் அதிகமாக செலவிட்டுள்ளது.
மக்களுக்கான குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டங்களை வகுத்து உணவுப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளில் மாநில நிர்வாகம் எப்போதும் அக்கறை கொண்டுள்ளது என்று வேளாண்மை ஆட்சிக்குழு உறுப்பினர் இஸ்ஹாம் ஹாஷிம் கூறினார்.
"மத்திய அரசுடன் இணைந்து குறுகிய காலத் திட்டத்திற்கு மலிவு விற்பனையை உட்பட பல நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
"மலிவு விற்பனை திட்டம், ஆரம்ப மற்றும் உடனடி நடவடிக்கையாகக் கருதப்பட்டாலும், மக்களுக்கு உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர் மற்றும் கோஹிஜ்ரா விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் முயற்சிகளுக்கு ஆதரவாக இந்த ஆண்டும் கடந்த ஆண்டும் RM25 மில்லியனுக்கும் அதிகமாகச் செலவிட்டுள்ளோம்.
இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வில் மேரு சட்டமன்ற உறுப்பினர் மரியம் அப்துல் ரஷீயிட்டின் கேள்விக்குப் பதிலளித்த அவர், "இந்த முயற்சி மக்களுக்குத் தேவையான முட்டை, கோழி மற்றும் அரிசி போன்ற அடிப்படை பொருட்களை நிலைப்படுத்த பெரிதும் உதவுகிறது.
"மடகாஸ்காரிலிருந்து இறால் மற்றும் பல விதைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், தொற்றுநோய் காலத்தின் போது இறக்குமதி செய்ய முடியாத நிலையில் தாய்லாந்திலிருந்து அவற்றை வாங்கினோம். ஆனால் தரம் குறைவாக உள்ளது.
"எனவே, சோளம், மெலான் மற்றும் பப்பாளி விதைகளை நாங்கள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியதால், சிலாங்கூர் விவசாயத்தில் முக்கிய கூறுகளில் கவனம் செலுத்தும்," என்று அவர் கூறினார்.




