உலு சிலாங்கூர், நவ 22- உலு சிலாங்கூர் தொகுதியிலுள்ள நைகல்
கார்டனர் மற்றும் புக்கிட் தாகார் ஆகிய இடங்களுக்கு உலு சிலாங்கூர்
நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் என்.சத்திய பிரகாஷ்
நேரில் சென்று வட்டார மக்களிடம் தீபாவளி அன்பளிப்புகளை
வழங்கினார்.
அதே சமயம், ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுக்கான 200 வெள்ளி
தொகையை கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீயோங் ஹியோங்
சார்பில் அவ்விரு பகுதிகளையும் சேர்ந்த 82 பேரிடம் அவர் ஒப்படைத்தார்.
இவ்விரு பகுதிகளும் கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதிக்கு
உட்பட்டவை என்பது குறிப்பித்தக்கது.
அவ்விரு பகுதிகளையும் சேர்ந்தவர்கள் ஜோம் ஷோப்பிங் பற்றுச்
சீட்டுகளைப் பயன்படுத்தி பொருள்களை வாங்க வெகு தொலைவுக்குப்
பயணம் செய்ய வேண்டியுள்ளதால் அவர்களுக்கு அந்த பற்றுச் சீட்டுக்கான
தொகை ரொக்கமாக வழங்கப்பட்டன.
புக்கிட் தாகார் பகுதியைச் சேர்ந்த 25 குடும்பங்களுக்கும் நைகல் கார்டனர்
பகுதியைச் சேர்ந்த 59 குடும்பங்களுக்கும் தீபாவளி அன்பளிப்புகளும்
ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுக்கான தொகையும் வழங்கப்பட்டன என
சத்திய பிரகாஷ் குறிப்பிட்டார்.
கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ வர முடியாத நிலையில் அவர்
சார்பாக இந்நிதியை நான் ஒப்படைத்தேன். எனது சார்பாக தீபாவளி
பலகாரங்கள் அடங்கிய பொட்டலங்களையும் நான் வழஙகினேன் என்று
அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிதி ஒப்படைப்பு நிகழ்வில் கோல குபு பாரு தொகுதி சேவை மையப் பொறுப்பாளர்கள் மற்றும் உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர்களான ப. புவனேஸ்வரன், வீ.முருகன், ஜெ.கலைச்செல்வன், சின்னையா ஆகியோரும் கலந்து கொண்டனர்.




