SELANGOR

கும்புலான் பெராங்சாங் சிலாங்கூரின் துணை நிறுவனம் பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் உடன் ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

22 நவம்பர் 2023, 4:40 AM
கும்புலான் பெராங்சாங் சிலாங்கூரின் துணை நிறுவனம் பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் உடன் ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

கோலாலம்பூர், நவ 22: கும்புலான் பெராங்சாங் சிலாங்கூரின் (KPS), 51 சதவீத கொண்டிருக்கும் துணை நிறுவனம் ``Aqua-Flo Sdn Bhd``, RM.16.2  கோடி  மதிப்புடைய நீர் சுத்திகரிப்பு இரசாயனங்களை வழங்குவதற்குப் பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் உடன் ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இரண்டு வருட ஒப்பந்தம் ஜனவரி 1, 2024 முதல் டிசம்பர் 31, 2025 வரை தொடங்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

"ஒப்பந்த காலம் முழுவதும் கேபிஎஸ் குழுமத்தின் வருமானம் மற்றும் நிகர சொத்துக்களுக்கு இந்த ஒப்பந்தம் சாதகமாகப் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"ஒப்பந்தத்துடன் தொடர்புடைய  இரசாயன பொருட்களின் விலை, பொருட்களின் விநியோகம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் போன்ற சவால்கள் இந்த வணிகத்தில் உண்டு என தெரிவிக்கப்பட்டது.

- பெர்னாமா

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.