SELANGOR

சிலாங்கூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி எதிர்வரும் டிசம்பரில் தொடங்கும்

22 நவம்பர் 2023, 2:02 AM
சிலாங்கூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி எதிர்வரும் டிசம்பரில் தொடங்கும்

ஷா ஆலம், நவ 22: சிலாங்கூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி (SIBF) 2023 எதிர்வரும் டிசம்பர் 1 முதல் 10 வரை பொது மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஷா ஆலம் சிட்டி கவுன்சில் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வெளிநாட்டு பதிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்பர். இந்த புத்தகக் கண்காட்சி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில், அதிர்ஷ்ட குலுக்கு, புத்தக விற்பனை மற்றும் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் வருகையாளர்களுக்கு  காத்திருக்கின்றன.

2006 முதல் 16 ஆண்டுகளாக ஏற்பாடு செய்யப்பட்ட சிலாங்கூர் புத்தகக் கண் காட்சியைத் தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் முறையாக சிலாங்கூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் துருக்கி, வட மாசிடோனியா, தென் கொரியா மற்றும் எகிப்து உட்பட 225 உள்ளூர் மற்றும் சர்வதேச கண்காட்சியாளர்கள் கலந்து கொள்வர்.

புத்தகக் கண்காட்சி பிகேனேஸ் வளாகத்தில் தொடங்கியது, பின்னர் எம்பிஎஸ்ஏ மாநாட்டு மையத்திற்கு மாற்றப்பட்டது, இது கிட்டத்தட்ட 5 மில்லியன் பார்வையாளர்களைப் பதிவு செய்தது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.