SELANGOR

பெருந்தொற்றும் வெள்ளமும்  நிதிக் கையிருப்பின் அவசியத்தை நமக்கு உணர்த்தின- மந்திரி புசார்

21 நவம்பர் 2023, 8:16 AM
பெருந்தொற்றும் வெள்ளமும்  நிதிக் கையிருப்பின் அவசியத்தை நமக்கு உணர்த்தின- மந்திரி புசார்

ஷா ஆலம், நவ 21 - கோவிட்-19 தொற்றுநோய் மற்றும்  கடந்த 2021 இல் ஏற்பட்ட பெரும் வெள்ளம் போன்றப் பேரிடர்கள்   போதிய நிதிக் கையிருப்பை மாநில அரசு கொண்டிருப்பதன் அவசியத்தை உணர்த்தின  என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இத்தகைய நெருக்கடிகளின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு  திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உதவிகள் வழங்குவதற்கு உதவிய வலுவான நிதிக் கையிருப்புக்கு  நன்றி என்று அவர் சொன்னார்.

மாநில அரசின் வசமுள்ள பெரும் நிதிக் கையிருப்பைக் கொண்டு மக்களை மையமாகக் கொண்ட திட்டங்களுக்கு அதிக செலவு செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கொடுத்து வரும் அழுத்தத்திற்குப் பதிலளிக்கும் விதமாக  மந்திரி புசாரின் இந்த பதில் இருந்தது.

சிலாங்கூர் அரசாங்கம் தனது முன்னோடியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி கடைப்பிடித்த விவேகமற்ற அணுகுமுறையைத் தொடர்ந்திருந்தால்  இந்த ஆண்டு இறுதிக்குள் மாநில அரசின் நிதிக் கையிருப்பு வெகுவாக குறைந்திருக்கும்  என்று மாநில சட்டமன்றத்தில் உரையாற்றியபோது அவர்  தெரிவித்தார்.

அரஙுக்கு இன்னும் கணிசமான நிதிக் கையிருப்பு தேவைப்படுகிறது என்பதை கோவிட்-19 தொற்று நோய் மற்றும் 2021 இல் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தைக் கையாள்வதன் மூலம் எங்களுக்கு கிடைத்த  அனுபவங்கள் உணர்த்துகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

உதாரணமாக, எங்களின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த நிதிகளில் ஒன்றான சிலாங்கூர் பாரம்பரிய நிதியை எடுத்துக்கொள்ளுங்கள். எங்களிடம் 70 கோடி வெள்ளி வரை சேமிப்பு உள்ளது. இரட்டை பேரிடர்களின் போது அதில் ஒரு பகுதியைப் பயன்படுத்தினோம்  என்று  2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டார்.

சாதாரண சூழ்நிலையில், பாரம்பரிய நிதி 100 கோடி வெள்ளிக்கும் மேல் உயரும்போது மட்டுமே அதனைப் பயன்படுத்துவது  நிதி ரீதியாக விவேகமானதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

அரசு ஊழியர்களுக்கான ஊதியக் கடமைகளை நிறைவேற்ற மாநில  நிதிக் கையிருப்பு அவசியம். அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் முதல் மூன்று மாதங்களுக்கு அதாவது பட்ஜெட் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் பிரீமியம், வரிகள் மற்றும் பிற கட்டணங்களைச் செலுத்துவதற்கு இந்த நிதி உதவும் என்று அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.