ஷா ஆலம், நவ 21: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப்
பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான்
ரஹ்மா திட்டம் நாளை மேலும் நான்கு இடங்களில் காலை 10
மணிக்குத் தொடரும்.
நாளை எம்பிகேகே பாரிட் 4 திமோர் (சபாக்), ஜாலான் பெஸ்தாரி
கம்போங் சுங்கை தங்காஸ் (சுங்கை ராமால்), பண்டார் உத்தாமா
பத்தாங் காலி மஸ்ஜிட் வளாகம் (கோலா குபு பாரு) மற்றும் பாக்கிர்
வெல்வைட்@7 ஷா ஆலம் வளாகம் (கோத்தா அங்கரிக்) ஆகிய
இடங்களில் மலிவு விற்பனை நடைபெறும்.
சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தால் (PKPS) கிட்டத்தட்ட 3000
இடங்களில் இந்த மலிவு விற்பனை நடத்தப்பட்டுள்ளது. ஐந்து
மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த இச்சந்தைக்குச்
சிலாங்கூர் அரசு RM40 மில்லியன் மானியத்தைச் செலவிட்டுள்ளது.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும்
மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை
ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00
வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5
கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற
இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி
அறிந்து கொள்ளலாம்.




