SELANGOR

பண்டார் சௌஜானா உத்தமா 2 இடைநிலைப்பள்ளி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் செயல்படத் தொடங்கும்

20 நவம்பர் 2023, 8:27 AM
பண்டார் சௌஜானா உத்தமா 2 இடைநிலைப்பள்ளி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் செயல்படத் தொடங்கும்

ஷா ஆலம், நவ. 20: பண்டார் சௌஜானா உத்தமா 2 இடைநிலைப்பள்ளி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என துணைக் கல்வி அமைச்சர் கூறினார்.

ஆகஸ்ட் 30 ஆம் தேதி பள்ளியின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் செப்டம்பர் 27 ஆம் தேதி சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறையிடம் ஒப்படைக்கும் விழா நிறைவடைந்தது என லிம் ஹுய் இங் கூறினார்.

"பள்ளியின் ஆயத்த நிலையை உறுதி செய்வதற்காகப் பல தொடர் ஆரம்ப கூட்டங்கள், பயணங்கள் மற்றும் அப்பள்ளியின் செயல்பாடு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

"அடுத்த திறப்புக்கு முந்தைய பள்ளி கூட்டம் டிசம்பர் 2023 தொடக்கத்தில் நடைபெறும்." என அவர் சொன்னார்.

பள்ளி திறப்பு குறித்து விளக்கம் கேட்ட டத்தோ ஆர் ரமணனுக்கு (ஹராப்பான்-சுங்கை பூலோ) அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.