SELANGOR

போர்ட் கிள்ளான் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் தீபாவளி   உபசரிப்பு

20 நவம்பர் 2023, 6:21 AM
போர்ட் கிள்ளான் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் தீபாவளி   உபசரிப்பு

கிள்ளான், நவ 20 -  போர்ட் கிள்ளான் சடடமன்றத் தொகுதியின் ஏற்பாட்டில் தீபாவளி பொது உபசரிப்பு கடந்த 18ஆம் தேதி சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பண்டமாரான் பி கே.என்.எஸ். அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற இந்த பொது உபசரிப்பில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்  வீ.கணபதிராவ் தனது துணைவியாருடன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

போர்ட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான்ஹுரி சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்த  இந்த பொது உபசரிப்பில்  பல்சுவை பதார்த்தங்கள் பரிமாறப்பட்டதோடு அதிர்ஷ்டக் குலுக்கு, தீபாவளி அன்பளிப்பு மற்றும் பல்லின கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

தொகுதியிலுள்ள பல்லின மக்களிடையே நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்ந பொது உபசரிப்பை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த அஸ்மிஸாமை தாம் பெரிதும் பாராட்டுவதாக கணபதிராவ் தமது உரையில் கூறினார்.

தொகுதி மக்கள் மீது பரிவு கொண்டத் தலைவராக விளங்கும் அஸ்மிஸாம், இன, மத வேறுபாடின்றி தொகுதி மக்கள் அனைவருக்கும் சேவையாற்றி வருவதாக அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.