ஷா ஆலம், நவ 17 - இவ்வாண்டு செப்டம்பர் வரை 6 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பேருந்து சேவையைப் பயன்படுத்தியுள்ளனர் என்று போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் சேவைக்கு ஊக்கமளிக்கும் ஆதரவு கிடைத்தாலும் பயணிகளின் எண்ணிக்கை இந்த திட்டத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் அளவுகோல் அல்ல என்று அவர் சொன்னார்.
ஏனெனில், ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவைத் திட்டத்தின் நோக்கம் லாபம் ஈட்டுவது அல்ல. மாறாக சமூகத்தின் அனைத்து மட்டத்தினரும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதாகும் .
இது தவிர தங்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் தரப்பினரின் நிதிச் சுமையைக் குறைப்பதும் இதன் நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் சேவை குறித்து உலு பெர்ணம் உறுப்பினர் முயிசுடின் மஹாயுடின் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
மாநிலத்தின் பொதுப் போக்குவரத்து அமைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்று மாநில அரசு விரும்புவதோடு அது மக்களின் முதல் போக்குவரத்து தேர்வாக மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் இங் கூறினார்.
மாநில அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சிலாங்கூ
சிலாங்கூர் மொபிலிட்டி என்பது ஒரு பொதுப் போக்குவரத்து அமைப்பாக விளங்குகிறது. இது போக்குவரத்தின் அனைத்து அம்சங்களையும் ஒரே கூரையின் கீழ் இணைக்கிறது. மேலும் இது தரவு ஆய்வு மூலம் வழிநடத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.




