SELANGOR

நாளை எஹ்சான் ரஹ்மா விற்பனை மேலும் மூன்று செகி ஃப்ரெஷ் பல்பொருள் அங்காடிகளில் நடைபெறும்

17 நவம்பர் 2023, 3:42 AM
நாளை எஹ்சான் ரஹ்மா விற்பனை மேலும் மூன்று செகி ஃப்ரெஷ் பல்பொருள் அங்காடிகளில் நடைபெறும்

ஷா ஆலம், நவ. 17: நாளை பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் எஹ்சான் ரஹ்மா விற்பனை மேலும் மூன்று செகி ஃப்ரெஷ் பல்பொருள் அங்காடிகளில் நடைபெறும்.

அவ்விடங்கள் செளஜானா உத்தாமா, கோலா சிலாங்கூர், மற்றும் காஜாங் ஆகிய பகுதிகள் ஆகும் என செகி ஃபிரெஷ் முகநூலில் தெரிவித்தது.

"சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து, தேவைப்படுபவர்களுக்கு, குறிப்பாக வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு நன்மைகளை வழங்குவதற்கான ஒரு நடவடிக்கையில் நாங்கள் இணைந்து செயல்படுவோம்.

"செகி ஃப்ரெஷில் மலிவான மற்றும் தரமான அடிப்படைப் பொருட்களைப் பெறுங்கள்" என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

ஒரு கிலோ கோழி RM6.99, க்யூப் செய்யப்பட்ட இறைச்சி (RM10/பேக்), சியகாப் மீன் (RM7), D கிரேட் முட்டை (ஒரு தட்டு RM10), கோதுமை மாவு (RM2/பேக்) மற்றும் 5kg சமையல் எண்ணெய் (RM25) ஆகும்.

இதுவரை இத்திட்டத்தின் மூலம் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ள நிலையில் 2,850 இடங்களில் மலிவு விற்பனையை செயல்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் RM40 மில்லியன் மானியங்களை செலவிட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.