SELANGOR

பிளாட்ஸ் பிரச்சாரத்தை முன்னிட்டு RM5 மதிப்புள்ள 20,000 ரஹ்மா டிஜிட்டல் கூப்பன்கள் விநியோகிக்கப்படும்

17 நவம்பர் 2023, 3:06 AM
பிளாட்ஸ் பிரச்சாரத்தை முன்னிட்டு RM5 மதிப்புள்ள 20,000 ரஹ்மா டிஜிட்டல் கூப்பன்கள் விநியோகிக்கப்படும்

ஷா ஆலம், நவ 17: இந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பிளாட்ஸ் பிரச்சாரத்தை ``PLATS Enter the Market Campaign`` (பிஎம்பி) முன்னிட்டு வருகையாளர்களுக்கு RM5 மதிப்புள்ள மொத்தம் 20,000 ரஹ்மா டிஜிட்டல் கூப்பன்கள் விநியோகிக்கப்படும்.

இரண்டு மாத பிளாட்ஃபார்ம் சிலாங்கூர் (பிளாட்ஸ்) பிரச்சாரம் மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 இடங்களில் நடத்தவுள்ளதாகச் சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐயின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

பொதுமக்களுக்கு மெய்நிகர் தளத்தில் விளம்பரத்தை அதிகரிப்பதோடு பிளாட்ஸ்யில் பதிவு செய்ய வர்த்தகர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நோரிதா முகமட் சிடேக் கூறினார்.

"பிஎம்பி பிரச்சாரத்தின் போது, RM5 மதிப்புள்ள 20,000 ரஹ்மா டிஜிட்டல் கூப்பன்கள் வருகையாளர்களுக்கு விநியோகிக்கப்படும். சந்தைகள் நடைபெறும் நாட்களில் அவர்கள் கூப்பனைப் பெறலாம்.

"பிளாட்ஸ் தளத்தின் மூலம் நுகர்வோர் மற்றும் வர்த்தகர்களின் சுமையை எளிதாக்குவது எம்பிஐயின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகளில் ஒன்றாகும்" என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இடங்கள் மற்றும் தேதிகளின் (டிசம்பர்) பட்டியல் எம்பிஐ மற்றும் பிளாட்ஸ் சமூக ஊடகங்கள் மூலம் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.