SELANGOR

வேறு மாநிலத்தில் பிறந்திருந்தாலும் அனாஸ் உதவித்தொகை பெற வாய்ப்பு – டத்தோ மந்திரி புசார் 

15 நவம்பர் 2023, 1:07 PM
வேறு மாநிலத்தில் பிறந்திருந்தாலும் அனாஸ் உதவித்தொகை பெற வாய்ப்பு – டத்தோ மந்திரி புசார் 

ஷா ஆலம், நவ 15: சிலாங்கூரில் வசிக்கும் குழந்தைகள் வேறு மாநிலத்தில் பிறந்திருந்தாலும் RM500 மதிப்புள்ள இல்திசம் அனாக் சிலாங்கூர் (அனாஸ்) உதவித் தொகையைப் பெறுவதற்குத் தகுதி உடையவர்கள் என்பதை உறுதி செய்வதற்கான பொருத்தமான முறையை மாநில அரசு ஆராய்ந்து வருகிறது.

சபாக் பெர்ணம் மற்றும் சிப்பாங்கில் உள்ள குடும்பங்களில் சிலர் பிரசவத்திற்காக அருகே உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியிருப்பதால், இந்த குடும்பங்கள் மீது கவனம் செலுத்துவதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.

"இந்த இரண்டு பகுதிகளிலும், பிரசவத்தில் சிக்கல்களை அனுபவிக்கும் தாய்மார்கள் உள்ளனர் மற்றும் அவர்கள் தெலுக் இந்தான் (பேராக்) மற்றும் போர்ட்டிக்சன் (நெகிரி செம்பிலான்) செல்ல வேண்டியிருக்கிறது.

"எனவே, தஞ்சோங் சிப்பாட்டில் (சிப்பாங்) ஒரு புதிய மருத்துவமனையை கட்டுவதுடன், (எம்எம்கேஎன்) வேறு மாநிலத்தில் பிறந்ததால் அக் குழந்தைகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதையும் மாநில ஆட்சிக்குழு ஆராய்கிறது. ," என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் கூறினார்.

குவாங் பிரதிநிதி முகமட் ரஃபிக் முகமட் அப்துல்லாவின் கேள்விக்குப் பதிலளித்த அமிருடின், நிர்வாகத்தால் திட்டமிடப்பட்ட உதவி உண்மையில் மாநிலத்தில் பிறந்த குழந்தைகளை மையமாக கொண்டது. அதுமட்டுமில்லாமல், நீண்ட காலமாக வசிக்கும் குடும்பங்களுக்கும் உதவுகிறது.

இந்த ஆண்டு பட்ஜெட்டில், அனாஸ் திட்டத்திற்கு வெற்றிகரமாக RM3 மில்லியனை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. இது பெறுநருக்கு ஐந்து வயது வரை வருடத்திற்கு RM100 சேமிப்பில் செலுத்தப்படும்.

இந்த திட்டமானது 30,000 குழந்தைகள் நேரடியாக தேசியக் கல்வி திட்ட சேமிப்பு (SSPN) கணக்கில் சேர்ந்து, பயன் பெற வாய்ப்பளிக்கும்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.