ஷா ஆலம், நவ 15: உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் (எம்பிஎச்எஸ்) ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் (எஸ்எஸ்பி) மற்றும் ஃப்ளெக்ஸி பார்க்கிங் செயலிகள் மூலம் ஸ்மார்ட் பார்க்கிங் கட்டண முறையை அமல்படுத்தியது.
இத்திட்டத்திற்கான கட்டம் 1, புக்கிட் பெருந்தோங் மற்றும் புக்கிட் செந்தோசாவில் டிசம்பர் 1 முதல் செயல்படுத்தப்படும் என்று உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் முகநூல் வழி தெரிவித்தது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் கட்டம் 2 அமலுக்கு வரும். அதில் பத்தாங் காலி மற்றும் கோலா குபு பாரு பகுதிகள் அடங்கும்
காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை (திங்கள் முதல் வெள்ளி வரை) பார்க்கிங் கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு RM0.50 மற்றும் மாதத்திற்கு RM50. சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் இலவசம்.
மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் 1-700-819-612 / 03-6064 1331 நீட்டிப்பு 135 என்ற ஹாட்லைனைத் தொடர்பு கொள்ளவும்.




