SELANGOR

வணிகத்தை விரிவுபடுத்த வர்த்தகர்கள் சிலாங்கூர் ஹிஜ்ரா நிதித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

14 நவம்பர் 2023, 5:52 AM
வணிகத்தை விரிவுபடுத்த வர்த்தகர்கள் சிலாங்கூர் ஹிஜ்ரா நிதித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலாம், நவ 14 : சிறிய அளவிலான வணிகம் செய்ய அல்லது தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான மூலதன உதவி தேவைப்படும் வர்த்தகர்கள் சிலாங்கூர் ஹிஜ்ரா அறக்கட்டளையின் (ஹிஜ்ரா) நிதித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் நிதியுதவித் தகவலை  https://www.hijrahselangor.com/risalah-skim-hijrah.../  அல்லது http://mikrokredit.selangor.gov.my/ என்ற இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள் நிதியுதவி பற்றிய கூடுதல் தகவலுக்கு அருகிலுள்ள ஹிஜ்ரா கிளையையும் தொடர்பு கொள்ளலாம்.

மூலதனப் பற்றாக்குறையின் சிக்கலை எதிர்கொள்ளும் வணிகர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு ஹிஜ்ர நிதிக் கடன்களை வழங்குகிறது.

ஜூன் 2023 வரை, மொத்தம் 58,464 பங்கேற்பாளர்கள் RM768.8 மில்லியனுக்கும் அதிகமான நிதியைப் பெற்றுள்ளனர். அதில் மொத்தம் 34,823 பெறுநர்கள் அல்லது 60 சதவீதம் பேர் பெண் தொழில்முனைவோர் ஆவர்.

கூடுதலாக, ஹிஜ்ராஹ் டிஜிட்டல் முறையில் வணிகத்தை அதிகரிக்க டிக் டோக் உத்தி வகுப்புகள் போன்ற பல்வேறு திட்டங்களையும் இலவசமாக ஏற்பாடு செய்கிறது.

வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தயாரிப்புகள் நாடு மற்றும் வெளிநாடுகளில் போட்டி தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வதற்காக சந்தைப்படுத்தல் வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.