SELANGOR

பியாலா ஹரப்பான் டாமான்சாரா ஃபுட்சல் 5,000 ரிங்கிட் ரொக்கப் பரிசு

14 நவம்பர் 2023, 5:38 AM
பியாலா ஹரப்பான் டாமான்சாரா ஃபுட்சல் 5,000 ரிங்கிட் ரொக்கப் பரிசு

ஷா ஆலம், நவ 14: நவம்பர் 25 அன்று பெட்டாலிங் ஜெயா வின் ரிப்பளிக்  ஃபுட்சால் அரங்கில் நடைபெறும் பியாலா ஹரப்பான் ஃபுட்சல் சாம்பியன்ஷிப் 2023 மூலம் 5,000 ரிங்கிட் வரை ரொக்க பரிசுகளை பொதுமக்கள் பெற வாய்ப்பு உள்ளது.

டாமன்சாரா ராக்கெட் விளையாட்டு கழகம் மற்றும் கம்போங் துங்கு சட்டமன்ற  தொகுதி சேவை மையம் (ஏடிஎன்) இணைந்து நடத்தும்  இப்போட்டிக்கு டாமன்சாரா நாடாளுமன்ற தொகுதி அலுவலகத்தின் ஆதரவுடன்  நடத்தப்படுவதாக டமன்சாரா ராக்கெட் கழகத் தலைவர் கூறினார்.

"கடந்த ஜூலை மாதம் கம்போங் துங்கு தொகுதி கால்பந்து போட்டியை வெற்றிகரமாக ஒழுங்கமைத்ததைத் தொடர்ந்து, நாங்கள் மீண்டும் நவம்பர் 25 ஆம் தேதி இப்போட்டியை தொடருகிறோம்.

"ஆரோக்கியமான வாழ்க்கை முறையை  இளைஞர்களிடம் ஊக்குவிப்பதோடு, விளையாட்டின் மூலம் நட்பை வலுப்படுத்துவதும் இப்போட்டியின் நோக்கமாகும்" என்று நூர் ரஹீம் நசீர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இந்த போட்டியில் 48 அணிகள் பங்கேற்கும் மற்றும் போட்டி வடிவம் நாக் அவுட் நிலைக்கு முன் லீக்கில் நடைபெறும்.

போட்டியின் வெற்றியாளருக்கு கோப்பையுடன் RM5,000, இரண்டாம் நிலைக்கு (RM3,000), மூன்றாம் நிலைக்கு RM2,000, நான்காம் நிலைக்கு (RM1,000) மற்றும் ஐந்தில் இருந்து எட்டாவது நிலை வரை RM500 வழங்கப்படும்.

ஆர்வமுள்ள குழுக்கள் ``Piala Harapan Damansara`` முகநூலைப் பார்வையிடலாம் அல்லது மேலும் தகவலுக்கு 018-9060270 (ரஹீம்) ஐ அழைக்கலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.