SELANGOR

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவின் தீபாவளி உபசரிப்பு- மந்திரி புசார் சிறப்பு வருகை

14 நவம்பர் 2023, 3:36 AM
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவின் தீபாவளி உபசரிப்பு- மந்திரி புசார் சிறப்பு வருகை

கிள்ளான், நவ 14- கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் ஏற்பாட்டில் தீபாவளி பொது உபசரிப்பு கடந்த 12ஆம் தேதி இங்குள்ள பொட்டானிக் ரிசோர்ட் கிளப்பில் நடைபெற்றது.

இந்த உபசரிப்பில் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, ஜசெக கட்சியின் ஆலோசகர் டான்ஸ்ரீ லிம் கிட் சியாங், பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷியேரெட்ஈஸான், சீபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக், பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர்  டோனி லிரோங், போர்ட் கிள்ளான் உறுப்பினர் அஸ்மிஸான் ஸமான் ஹூரி உள்பட பிரமுகர்கள் மற்றும் பல்லினங்களைச் சேர்ந்த திரளான மக்கள் இந்த விருந்து நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த விருந்து நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்கள் மறறும் பொது மக்களுக்குக் கணபதிராவ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பொது மக்களுக்கும் மக்கள் பிரதிநிகளுக்கும் இடையே நட்புறவு

மேலோங்குவதற்கு இத்தகைய பொது உபசரிப்புகள் பெரிதும் துணை புரியும் என்று கணபதிராவ் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.