Budget

சபாக் பெர்ணம் பகுதியின் (“SABDA”) வளர்ச்சியின் கீழ் சுங்கை லாங் கடல் உணவு & வேளாண் உணவு கீழ்நிலைத் தொழில்  மேம்பாட்டு திட்டம்

10 நவம்பர் 2023, 10:40 AM
சபாக் பெர்ணம் பகுதியின் (“SABDA”) வளர்ச்சியின் கீழ் சுங்கை லாங் கடல் உணவு & வேளாண் உணவு கீழ்நிலைத் தொழில்  மேம்பாட்டு திட்டம்

ஷா ஆலம், நவ 10: பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட நகர்ப்புற மாதிரியின் அடிப்படையில் வளர்ச்சியடையக் கூடிய சாத்தியக்கூறுகளைக் கொண்ட மாநில அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட மூன்று புதிய பொருளாதாரப் பகுதிகளில் சபாக் பெர்ணம் மேம்பாட்டுப் பகுதி அல்லது சப்டாவும் ஒன்றாகும்.

SABDA வின் முக்கிய கவனம் உணவுப் பாதுகாப்பு மற்றும் தளவாடங்களில் இந்த இடத்தைப் பயன்படுத்தி சிலாங்கூரின் வடக்கே  பேராக் மாநிலத்தின்  நுழைவாயிலாகவும்  இருக்கும் பகுதியை  மேம்படுத்துவது.

சுங்கை லாங் நதி கடல் உணவு & வேளாண் உணவு கீழ்நிலைத் தொழில் திட்டம் மீன் பண்ணை தொழிலுக்கு வாய்ப்புகளை வழங்குவதுடன் உள்ளூர் கடல் உணவு உற்பத்தியை அதிகரிக்க உயர் தொழில்நுட்ப  உணவு பதப்படுத்தும் வசதிகளை வழங்கு.வதாகும

இந்த முயற்சி  மலேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்துடன் (LKIM) இணைந்து ரிம 76 மில்லியன் முதல் கட்ட செலவில் உள்ளூர் சமூகத்திற்கு 3,000 வேலை வாய்ப்புகளை வழங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில்  ஜெட்டியை (படகு துறையை)  நவீன படுத்துதல், அதாவது தரையிறங்கும்  வசதிகளை மேம்படுத்துவதும்  மற்றும் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். ஆக  SABDA இன் கீழ் Sekinchan கடல் உணவு இறங்கும் வளாகமும் அடங்கும்

அதோடு, கடல் தயாரிப்புகள் இறங்கும் வளாகம், செக்கிஞ்சான் கடல் தயாரிப்புகள் இறங்கும் வளாகத் திட்டம், மீன்பிடி படகுகளின் திறன் மேலாண்மையை அதிகரிப்பது , இதன் மூலம் இந்த வளாகத்தில் மீன் விற்பனை பகுதி, பேக்கேஜிங் கிடங்கு, உறைவிப்பான் அறை, ஒரு படகு கட்டும் மற்றும் பராமரிப்பு பட்டறை  போன்ற தொழில்களையும் கொண்டுவந்து  மேம்படுதுவது.

இந்த முயற்சியானது செக்கிஞ்சான் பகுதியில் சுற்றுச்சூழல்-சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் நேர்மறையான மதிப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த முயற்சி MBI ஆல் இயக்கப்படும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.