SELANGOR

அம்பாங் நகராண்மைக் கழகத்தின் அங்காடிக் கடைகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

9 நவம்பர் 2023, 3:17 AM
அம்பாங் நகராண்மைக் கழகத்தின் அங்காடிக் கடைகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

ஷா ஆலம், நவ 9 - அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் அதன் நிர்வாகப் பகுதியில் உள்ள  அங்காடிக் கடைகள்  அல்லது கியோஸ்க் எனப்படும் வியாபார குடில்களை வாடகைக்குப் பெற வராத்தகர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

தாமான் செம்பாக்கா, லாமான் செலேரா எம்.பி.ஏ.ஜே.   @ அம்பாங் ஜெயா,  பாண்டான் இண்டா, தாமான் புக்கிட் இண்டா  உள்ளிட்ட பல இடங்களில் வர்த்தக  காலியிடங்கள் இருப்பதாக நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்த காலி வர்த்தக தளங்களில்   வணிகம் செய்ய  விரைந்து விண்ணப்பம் செய்யும்படி ஆர்வமுள்ள  தொழில்முனைவோரை நகராண்மைக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த கடைகளை வழங்குவதில் எம்பிஏஜே நிர்வாகப் பகுதியில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரர் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். வணிகப் பதிவுச் சான்றிதழ் (எஸ்எஸ்எம்), உணவு கையாளுதல் படிப்பு மற்றும் டைபாய்டு ஊசி பெற்றிருக்க வேண்டும் என்று அது அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

நவம்பர் 6 முதல் 14 வரை எம்.பி.ஏ.ஜே. தொழில்முனைவோர் உரிமம் மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு அதிகாரப்பூர்வக் கடிதத்தை அனுப்புவதன் மூலம் விண்ணப்பங்களைச் செய்யலாம்.

மேலும் தகவலுக்கு, நகராண்மைக் கழகத்தின் உரிமம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறையை 03-4285 7344 / 7170 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது  ppu@mpaj.gov.my என்ற மின்னஞ்சல் வழியாகவும் தகவல்களைப் பெறலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.