SELANGOR

பத்து தீகா தொகுதி ஏற்பாட்டில் 114 பேருக்குத் தீபாவளி அன்பளிப்பு

8 நவம்பர் 2023, 9:02 AM
பத்து தீகா தொகுதி ஏற்பாட்டில் 114 பேருக்குத் தீபாவளி அன்பளிப்பு

ஷா ஆலம், நவ 8 - எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவிருக்கும்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வசதி குறைந்தவர்களுக்குத் தீபாவளி

அன்பளிப்பு வழங்கும் நிகழ்வை பத்து தீகா சட்டமன்றத் தொகுதி சேவை

மையம் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

டைலர் பல்கலைக்கழகம் மற்றும் சேவை அறவாரியத்தின் ஆதரவிலான

இந்த நிகழ்ச்சி ஷா ஆலம், செக்சன் 24, டேவான் செங்காலில் சிறப்பாக

நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பத்து தீகா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 114 பேர்

தீபாவளி அன்பளிப்புகளைப் பெற்றுக் கொண்டதாகத் தொகுதி சட்டமன்ற

உறுப்பினர் டேனியல் அப்துல் ரஷிட் கூறினார்.

இந்த நிகழ்வில் ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாஜி அஸ்லி

யூசுப், ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் சித்தி நுர் ஆயிஷா முகமது

ஜைன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வை பத்து தீகா தொகுதியுடன் இணைந்து ஏற்பாடு செய்ய

முன் வந்து ஏற்பாட்டு ஆதரவையும் வழங்கிய டைலர்

பல்கலைக்கழகம் மற்றும் சேவை அறவாரியத்திற்கு தாம் நன்றி

தெரிவித்துக கொள்வதாக டேனியல் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.