கிள்ளான், நவ 7: தீபாவளிக்கு தயாராகும் இந்தியர்களுக்கு உதவும் வகையில் போர்ட் கிள்ளான் தொகுதியில் இன்று மலிவு விற்பனை நடைபெற்றது.
இங்குள்ள கம்போங் சிஜாங்காங் மதப் பள்ளியில் நடைபெற்ற மலிவு விற்பனையில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நல்ல வரவேற்பை வழங்கினர் என்று கிராமத் தலைவர் முஹமட் ஜாஹிருடின் முஹமட் கூறினார்.
"சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து குடியிருப்பாளர்கள் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக இந்தத் திட்டத்தை ஏற்பாடு செய்ததாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாகப் பண்டிகைக் காலங்களுக்கு முன்னதாக, இப்பகுதியில் அடிக்கடி மலிவு விற்பனையை ஏற்பாடு செய்ய சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அவர் கூறினார்.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தால் (PKPS) கிட்டத்தட்ட 3000 இடங்களில் இந்த மலிவு விற்பனை நடத்தப்பட்டுள்ளது. ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த இச்சந்தைக்குச் சிலாங்கூர் அரசு RM40 மில்லியன் மானியத்தைச் செலவிட்டுள்ளது.
பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS




