SELANGOR

வெள்ளம் காரணமாக ஜாலான் பண்டார் பாரு சாலாக் திங்கி (பிபிஎஸ்டி)-கோத்தா வாரிசன் சாலை மூடப்பட்டது

6 நவம்பர் 2023, 8:53 AM
வெள்ளம் காரணமாக ஜாலான் பண்டார் பாரு சாலாக் திங்கி (பிபிஎஸ்டி)-கோத்தா வாரிசன் சாலை மூடப்பட்டது

ஷா ஆலம், நவ.6: நேற்று பெய்த தொடர் மழை காரணமாக நீர் மட்டம்

அதிகரித்ததால் சிப்பாங்கில் உள்ள ஜாலான் பண்டார் பாரு சாலாக்

திங்கி (பிபிஎஸ்டி)-கோத்தா வாரிசன் சாலை இன்று முதல்

தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல், வாகனங்களுக்கு ஏற்படும் சிக்கல்களைத்

தவிர்ப்பதுடன், சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பு

அம்சங்களைக் கவனித்துக்கொள்வதற்காக அச்சாலையை மூடுவதாக

சிப்பாங் மாவட்ட காவல்துறை தலைமையகம் (IPD) அறிவித்துள்ளது.

இன்று தொடங்கி அறிவிப்பு வரும் வரை சாலை மூடல் தொடரும்

மற்றும் அனைத்து சாலை பயனாளிகளும் ஒத்துழைப்பார்கள் என

நம்பப்படுகிறது. மேலும் இந்த காலக் கட்டத்தில் மற்ற வழிகளைப்

பயன்படுத்த அறிவுறுத்தப் படுகிறது" என்று முகநூலில்

தெரிவிக்கப்பட்டது.

சிப்பாங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான்கு

தற்காலிகத் தங்கும் மையங்கள் (பிபிஎஸ்) திறக்கப்பட்டன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.