SELANGOR

கோத்தா கெமுனிங் தொகுதியின் தீபாவளி பொது உபசரிப்பில் 700 பேர் கலந்து கொண்டனர்

6 நவம்பர் 2023, 8:34 AM
கோத்தா கெமுனிங் தொகுதியின் தீபாவளி பொது உபசரிப்பில் 700 பேர் கலந்து கொண்டனர்

ஷா ஆலம், நவ 6- விரைவில் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளியை

முன்னிட்டு கோத்தா கெமுனிங் தொகுதி சேவை மையம் ஏற்பாடு செய்த

தீபாவளி பொது உபசரிப்பில் மூவினங்களையும் சேர்ந்த 700க்கும்

மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடா மைடின் பேரங்காடி கார்

நிறுத்துமிடத்தில் நேற்றிவு 7.00 மணி தொடங்கி 11.00 மணி வரை

நடைபெற்ற விருந்துடன் கூடிய இந்த பொது உபசரிப்பை கோத்தா

கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் மிகவும் சிறப்பான

முறையில் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த பொது உபசரிப்பில் மாநில சட்டமன்ற சபாநாயகர் லாவ் வேங் சான்,

மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, டாமன்சாரா நாடாளுமன்ற

உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, செனட்டர் சிவராஜ் சந்திரன், முன்னாள்

செனட்டர் சுரேஷ் சிங், நகராண்மைக் கழக உறுப்பினர்கள் மற்றும் இந்திய

சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

வருகையாளர்களை மகிழ்விப்பதற்காக இந்த நிகழ்வில் பரதம், நடனம்,

சிலம்பம் மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் அதிர்ஷ்டக் குலுக்கும்

இடம் பெற்றன. மேலும், ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை இன்னும்

பெறாத 150 பேரிடம் அந்த பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.

இந்த தீபாவளி பொது உபசரிப்பு சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு

உறுதுணையாக இருந்த அனைத்துத் தரப்பினருக்கும் தொகுதி சட்டமன்ற

உறுப்பினர் பிரகாஷ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.