SELANGOR

புக்கிட் மெலாவத்தியில் தீபாவளிச் சந்தை- கடைகளுக்கு விண்ணப்பிக்க வர்த்தகர்களுக்கு அழைப்பு

6 நவம்பர் 2023, 8:33 AM
புக்கிட் மெலாவத்தியில் தீபாவளிச் சந்தை- கடைகளுக்கு விண்ணப்பிக்க வர்த்தகர்களுக்கு அழைப்பு

கோல சிலாங்கூர், நவ 6 - இவ்வாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக 8வது மண்டலம் மற்றும் சித்தம் எனப்படும் சிலாங்கூர் இந்தியர் தொழில் ஆர்வலர் மையம் ஏற்பாட்டில் தீபாவளிச் சந்தை நடைபெறுகிறது.

புக்கிட் மெலாவத்தி தீபாவளிக் கொண்டாட்டம் எனும் இந்த விற்பனைச் சந்தை இம்மாதம் 4ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை ஹோட்டல் சன் இன்ஸ் எதிரே  நடைபெறும்.

கோல சிலாங்கூர் வட்டார மக்களுக்காக பிரத்தியேகமாக  இந்த விற்பனைச் சந்தை ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் கோல சிலாங்கூர் கெஅடிலான் தொகுதி உதவித் தலைவருமான ஆர்.சபாபதி கூறினார்.

இந்த தீபாவளி சந்தையில் மொத்தம் 25 கடைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த விற்பனை ஏழு நாட்களுக்கு நடைபெறும். இங்கு வர்த்தகம் செய்ய

விரும்புவோர் நகராண்மைக் கழக கட்டணமாகத் தினசரி 60.00 வெள்ளி வீதம்

மொத்தம் 420 வெள்ளி செலுத்த வேண்டும்.

இது தவிர கடைகளை அமைப்பதற்கான தற்காலிக கூடாரங்கள் மற்றும் மின்சார

வசதியை நாங்களே ஏற்பாடு செய்து தருவோம் என்று அவர் அவர் தெரிவித்தார்.

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தீபாவளி சந்தையில் கடைகளைப்

பெறுவதற்கு உடனடியாக விண்ணப்பிக்குமாறு கோல சிலாங்கூர் வட்டார

வர்த்தகர்களை சபாபதி கேட்டுக் கெண்டார்.

இந்த தீபாவளிச் சந்தையில் வியாபாரம் செய்ய ஆர்வமுள்ளவர்கள் 018-9804773

என்ற எண்களில் கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் ந

ந்தகுமாரியை அல்லது 016-63540359 என்ற எண்களில் சபாபதியைத் தொடர்பு

கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.