SELANGOR

தாமான் செந்தோசாவில் தீபாவளி சந்தை- குணராஜ் தொடக்கி வைத்தார்

6 நவம்பர் 2023, 8:27 AM
தாமான் செந்தோசாவில் தீபாவளி சந்தை- குணராஜ் தொடக்கி வைத்தார்

கிள்ளான், நவ 6 - இம்மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இங்குள்ள தாமான் செந்தோசாவில் தீபாவளி சந்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வருடாந்திர நிகழ்வான இந்த சந்தை தாமான் செந்தோசா, ஜாலான் டத்தோ யூசுப் சஹாபுடின் 28இல் இம்மாதம் 2ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் இந்த விற்பனைச் சந்தையை நேற்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

செந்தோசா தொகுதி இந்திய சமூகத் தலைவர் தங்கராஜா ஆர்.ஜி. பிரதர்ஸ் ஆதரவுடன்  இந்த  விற்பனைச் சந்தையை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த சந்தையில் 80 பேர் வரை வியாபாரம் செய்வதற்குரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தங்கராஜா கூறினார்.

காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறும் இச்சந்தையில் உடைகள், உணவுப் பொருள்கள், தீபாவளிப் பலகாரங்கள், அணிகலன்கள், வீட்டு அலங்காரப் பொருள்கள் உள்பட பல்வேறு பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இந்த தீபாவளிப் பண்டிகையின் போது வட்டார மக்களுக்கு வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நோக்கில் வருடந்தோறும் இந்த தீபாவளிச் சந்தையை தாங்கள் நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.