ECONOMY

கோத்தா கெமுனிங் தொகுதியின் தீபாவளி பொது உபசரிப்பு 5ஆம் தேதி ஸ்ரீ மூடாவில்

3 நவம்பர் 2023, 8:31 AM
கோத்தா கெமுனிங் தொகுதியின் தீபாவளி பொது உபசரிப்பு 5ஆம் தேதி ஸ்ரீ மூடாவில்

ஷா ஆலம், நவ 3- கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி நிலையிலான விருந்துடன் கூடிய தீபாவளி பொது உபசரிப்பு இம்மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடாவில் நடைபெறவுள்ளது.

பல்வேறு ஜனரஞ்சமான நிகழ்வுகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பொது உபசரிப்பு ஸ்ரீ மூடா மைடின் பேரங்காடியின் கார் நிறுத்துமிட்டத்தில் இரவு 7.00 மணி தொடங்கி 11.00 மணி வரை நடைபெறும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் கூறினார்.

இந்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் விருந்துபரிப்புடன் ஆடல், பாடல், பரதம் உள்ளிட்ட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு வருகை புரியும் சிறப்பு பிரமுகர்களின் தீபாவளி வாழ்த்துரையும் இடம் பெறும். 

தொகுதியில் உள்ள இந்துக்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.