SELANGOR

பாரம்பரிய வில்வித்தை போட்டியில் வெற்றியாளருக்கு ரிம1,000 ரொக்கம் காத்திருக்கிறது

2 நவம்பர் 2023, 6:48 AM
பாரம்பரிய வில்வித்தை போட்டியில் வெற்றியாளருக்கு ரிம1,000 ரொக்கம் காத்திருக்கிறது

ஷா ஆலம், நவ 2: எதிர்வரும் நவம்பர் 18 அன்று உலு சிலாங்கூர் நகராண்மை கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2023 கான பாரம்பரிய வில்வித்தை போட்டியில் வெற்றியாளருக்கு ரிம 1,000 ரொக்கம் காத்திருக்கிறது.

பங்கேற்பு மின்-சான்றிதழ், மதிய உணவு மற்றும் இலவச பானங்கள் உட்பட பங்கேற்புக்கான கட்டணம் RM50 மட்டுமே என்று ஊராட்சித் துறை தெரிவித்துள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு போட்டிப் பிரிவுகளுடன் முதல் 300 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் முதலாம் இடத்திற்கு RM1,000, இரண்டாம் இடத்திற்கு RM800 மற்றும் மூன்றாம் இடத்திற்கு RM600 வழங்கபடும். மேலும், நான்காவது இடத்திற்கு RM400, ஐந்தாவது இடத்திற்கு RM200, ஆறாவது இடத்திற்கு RM100 மற்றும் ஏழாவது முதல் 20வது இடம் வரை ஆறுதல் பரிசாக ஹேம்பர்ஸ் வழங்கப்படும்.

பதிவு இணைப்பை https://docs.google.com/.../1FAIpQLSdqghBQfpl66wONP4hFB8A வழியாக பெறலாம் அல்லது போஸ்டரில் கொடுக்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.

மேலும் விவரங்கள் மற்றும் விசாரணைகளுக்கு 0132942995 (ஜா) அல்லது 0193500305 (போக் சீ)ஐ தொடர்பு கொள்ளவும்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.