SELANGOR

நடமாடும் அலுவலகத்தில் பொதுமக்கள் மதிப்பீட்டு வரி மற்றும் அபராதத்தைச் செலுத்தலாம் - ஷா ஆலம் மாநகராட்சி  

2 நவம்பர் 2023, 6:23 AM
நடமாடும் அலுவலகத்தில் பொதுமக்கள்  மதிப்பீட்டு வரி மற்றும் அபராதத்தைச் செலுத்தலாம் - ஷா ஆலம் மாநகராட்சி  

ஷா ஆலம், நவ 2: இந்த சனிக்கிழமையன்று, ஷா ஆலமில் உள்ள ``AEON`` மால், பிரிவு 13-ன் திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பாடு செய்துள்ள 'ஷா ஆலம் ஆன் வீல்ஸ்' நடமாடும் அலுவலகத்தில் பொதுமக்கள் மதிப்பீட்டு வரி மற்றும் அபராதத்தைச் செலுத்தலாம்.

காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை புகார் கவுண்டர், அபராதம் மற்றும் உரிமங்களின் நிலையை சரிபார்த்தல் மற்றும் திட்ட புத்தகங்களின் விற்பனை ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஷா ஆலம் மாநகராட்சி  தெரிவித்தது.

"இந்த சேவையின் மூலம், சமூகத்தின் நலனுக்காக எம்பிஎஸ்ஏ அதன் சேவை முறையை மேலும் வலுப்படுத்த முடியும் என நம்புகிறது" என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒன்றில் கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்பு தலைவர் முகமட் அசார் முகமட் ஷெரீப்பின் தெரிவித்துள்ளார்.

நிலுவையில் உள்ள அபராதங்களைச் செலுத்துவது உட்பட மக்களின் விவகாரங்களை எளிதாக்கும் அணுகுமுறையாக எம்பிஎஸ்ஏ பல இடங்களில் இந்த முறையைப் பயன்படுத்தியது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.