SELANGOR

டூசுன் துவா தொகுதி ஒன்று கூடும் விழாவிற்கு வருகை புரியும் ஆரம்ப வருகையாளர்களுக்கு  இலவசங்கள் 

2 நவம்பர் 2023, 3:12 AM
டூசுன் துவா தொகுதி ஒன்று கூடும் விழாவிற்கு வருகை புரியும் ஆரம்ப வருகையாளர்களுக்கு  இலவசங்கள் 

ஷா ஆலம், நவ 1: எதிர்வரும் சனிக்கிழமை அன்று டூசுன் துவா தொகுதி ஒன்றுகூடல் விழாவிற்கு வருகை புரியும் முதல்  500  பேருக்கு  அரிசி, சர்க்கரை மற்றும் எண்ணெய் போன்ற அடிப்படை சமையல் பொருட்களை இலவசமாக பெற வாய்ப்புள்ளது.

இந்நிகழ்வு பத்து 14, உலு லங்காட் காலை சந்தை வளாகத்தில் காலை 8.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நடைபெறும் என சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹன் அப்துட் அஜீஸ் கூறினார்.

"இதில் 500 ஆரம்ப வருகையாளர்கள் அரிசி, சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றை இலவசமாக பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

பார்வையாளர்கள் உணவு, பானங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை இலவசமாக பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும் 'ஃப்ரீ மார்க்கெட்' திட்டமும் உள்ளது.

"இதர நடவடிக்கைகளில் அதிர்ஷ்ட குலுக்கு, சுகாதார பரிசோதனைகள், அரசு நிறுவன கண்காட்சிகள், வண்ணம் தீட்டும் போட்டி மற்றும் பெந்தராம கலைஞர்களின் நிகழ்ச்சியும் நடைபெறும் " என்று அவர் கூறினார்.

டூசுன் துவா தொகுதியில் வசிப்பவர்கள் அனைவரும் திருவிழாவை உற்சாகப்படுத்த பெருமளவில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.