ஷா ஆலம், நவ.1: பணிபுரியும் பெண்களின் சுமையைக் குறைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாமா கெர்ஜா திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மகளிர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
RM1,000 ஒரு முறை செலுத்தும் இத்திட்டத்திற்கு செலங்கா செயலி அல்லது https://mamakerja.selangkah.
"இத்திட்டத்தில் 5,000 வெற்றிகரமான விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே உதவி வழங்கப்படும்" என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.
கடந்த வாரம், உழைக்கும் பெண்களுக்கான ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது. இது ஆகஸ்ட் மாதம் மாநிலத் தேர்தலின் போது மக்களுக்கு வழங்கப்படும் என மாநில அரசாங்கம் அறிவித்த வாக்குறுதிகளில் ஒன்றாகும் என அவர் தெரிவித்தார்.
RM5 மில்லியன் ஒதுக்கப்பட்ட இத் திட்டத்திற்குக் குடும்ப வருமானம் RM8,000க்கு மிகாமல் 12 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளைக் கொண்ட பணிபுரியும் பெண்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் மற்றும் விண்ணப்பித்த 14 நாட்களுக்குப் பிறகு உதவி வழங்கப்படும்.
பிற தகுதித் தேவைகள் பின்வருமாறு:
-
வேலை மற்றும் சுயதொழில் செய்யும் பெண்கள்
-
சிலாங்கூரில் பிறந்த அல்லது 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிலாங்கூரில் வசிக்கும் பெண்கள்
-
சிலாங்கூரில் வாக்காளர்கள்
-
RM8,000 மற்றும் அதற்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்டவர்கள்.
-
உள்நாட்டு வருவாய் வாரியம் (LHDN) கணக்கு அல்லது ஊழியர் சேமநிதி வாரியம் (EPF) பங்களிப்பு உள்ள பெண்கள்
அசோ பிந்தார், பிங்காஸ் மற்றும் துனாஸ் உதவி பெறாதவர்கள் இந்த உதவி திட்டத்தில் பயனடைவர்.








