SELANGOR

உடனடி நடவடிக்கையால் சுங்கை கெச்சில் கம்போங் ரிஞ்சிங்கில் நீர் மாசுபாடு தடுக்கப்பட்டது

1 நவம்பர் 2023, 7:34 AM
உடனடி நடவடிக்கையால் சுங்கை கெச்சில் கம்போங் ரிஞ்சிங்கில் நீர் மாசுபாடு தடுக்கப்பட்டது

ஷா ஆலம், நவ. 1: காஜாங்கில் உள்ள சுங்கை கெச்சில் கம்போங் ரிஞ்சிங்கில் நேற்று ஏற்பட்ட மாசுபாட்டைக் கண்டறிந்து அதை நிறுத்த சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியமும் (LUAS) மாநில அமலாக்க அமைப்புகளும் உடனடியாகச் செயல்பட்டன.

ஆற்றில் காலை 11 மணியளவில் கண்டறியப்பட்ட வெள்ளை நுரை மற்றும் துர்நாற்றம் பற்றிய தகவல் லுவாஸ் பெற்றதாகச் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

விசாரணையில் உணவு பதப்படுத்தும் வளாகத்தில் இருந்து வெளியேறிய நுரை கலந்த கழிவு நீர் அருகில் உள்ள வடிகால்களில் விடுவித்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஜமாலியா ஜமாலுடின்  விளக்கினார்.

"இது வளாகத்திற்கு வெளியே காணப்படும் வெள்ளை நுரையின் தடயங்களை அடிப்படையாகக் கொண்டு  மேல் விவரங்கள் கண்டறியப்பட்டது என அவர் தெரிவித்தார்.

வளாகத்தில் நீர் மற்றும் கழிவுகளை வெளியேற்றுவதை நிறுத்துமாறு உத்தரவிடப் பட்டதை அடுத்து, ஆற்றின் நீர் இயல்பு நிலைக்கு திரும்பியது மற்றும் வெள்ளை நிறம் மற்றும் நுரையின் தடயங்கள் எதுவும் இல்லை," என்று அவர் இன்று அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.

சம்பவ பகுதியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள செமினி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் (LRA) செயல்பாட்டிற்கான அபாயங்களைத் தவிர்க்க விரைவான நடவடிக்கை உதவியது என்றும் ஜமாலியா தெரிவித்தார்.

"1999 ஆம் ஆண்டின் லுவாஸ் சட்டப் பிரிவு 79 (1) இன் கீழ் விசாரணை அறிக்கை ஒன்றை லுவாஸ் திறந்தது, இது குறைந்தபட்ச அபராதம் RM200,000 மற்றும் அதிகபட்சம் RM1 மில்லியன் மற்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகளுக்கு குறையாதச் சிறைத்தண்டனை ஆகியவற்றை விதிக்க வகை செய்யும்.

"சுற்றுச்சூழல் துறையும் சம்பந்தப்பட்ட வளாகங்களுக்கு வேலை நிறுத்த உத்தரவு வழங்கியது," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.