SELANGOR

மாநிலப் பட்ஜெட்டில் உணவு பாதுகாப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

1 நவம்பர் 2023, 4:52 AM
மாநிலப் பட்ஜெட்டில் உணவு பாதுகாப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஷா ஆலம், நவ 1- எதிர்வரும் நவம்பர் 10-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மாநிலப் பட்ஜெட்டில் உணவு பாதுகாப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேரிடர் அல்லது திடீர் விலைவாசி உயர்வு ஏற்பட்டால் போதுமான உணவு வழங்கல் பிரச்சனையை எதிர்கொள்ள வலியுறுத்த வேண்டும் என வேளாண்மைக்கான மாநிலச் செயற்குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம் கூறினார்.

“அரிசி போன்ற பல்வேறு அடிப்படைத் தேவைகளைச் சேமித்து வைக்கும் சுமார் RM100 மில்லியன் மதிப்பிலான உணவுக் கிடங்கை உருவாக்குவதற்கான மாற்று வழி உட்பட பல விஷயங்களை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.

"உணவுக்குக் காலாவதி தேதி இருப்பதால், கிடங்கின் செயலாக்கம் மற்றும் மேலாண்மை முறைகளை ஆய்வு செய்வதற்காக சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகத்துடன் (PKPS) இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

நெல் பயிர் விளைச்சலை அதிகரிப்பதன் மூலம், வழங்கல் தடைப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் முறையும் வலியுறுத்தப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்றாகும்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நவம்பர் 10ஆம் தேதி சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரில் சிலாங்கூர் பட்ஜெட் 2024 ஐ தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த ஆண்டில் மாநில வரவு செலவுத் திட்டத்திற்கு மொத்தம் RM2.45 பில்லியன் அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.